மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்..

இந்துக்களே ஒன்றுபடுங்கள்..!

எழுச்சி தொடரட்டும்..!!! சிலைகளை கடத்தும் கும்பல்களுக்கு உடந்தையாக இருக்கும் குடுமிகளுக்கு எதிராக இந்துக்களாய் ஒன்றுபடுவோம்..!!
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலிருந்து 1262 சாமி சிலைகள் மாயமாகி (திருடப்பட்டு) இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

வைரமுத்துக்கு எதிராக எழும்(ப்)பிய எழுச்சி தொடரட்டும். ஜீயர்களே, எச்சகளே, நித்தியின் ஆன்மீக சிஷ்யைகளே, இந்துக்களே..பொங்குவோம் வாருங்கள். பொங்கச்சோறு தின்றது போதும்.

இந்த பழங்கால சிலைகளுக்கு வெளிநாட்டில் அதிக விலை கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள், உள்ளே இருக்கும் குடுமிகளின் துணையோடு அவற்றை கடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே தொடரட்டும் நம் போராட்டம்.

பக்தர்கள் இதுகுறித்து வருத்தத்தோடு ஆன்மீகப் பெரியவர்கள் எது  எதற்கோ தேவையில்லாமல் போராடுகிறார்கள். உண்மையில் அவர்கள் போராடவேண்டிய விஷயம் இதுதான். மீதமுள்ள சிலைகளையாவது பாதுகாக்கலாம் என்றனர். 
செய்வேளா...???? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Receive update by Email