மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

குருமூர்த்தி காமெடி

ரஜினியும் பாஜகவும் இணைந்தால்...?

சீரியஸ் காமெடியன் சொறிமூர்த்தி

"தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்" என்று எத்தனை முறை அவர்கள் வாயினாலேயே நிரூபணமாகிறது என்று பாருங்கள். 
நேற்றைய துக்ளக் ஆண்டுவிழாவில் போது வழக்கமான தன்னுடைய காமெடிப்பேச்சால் அரங்கத்தை கிளுகிளுப்பூட்டிய திருவாளர் குருமூர்த்தி,  அப்படியே ரஜினியும் பாஜகவும் இணைவதுதான் வெற்றியையைத் தேடித் தருமாம். அதன் மூலம் தேசியம் வளருவதுதான் தன்னுடைய குறிக்கோள் எனவும் ஆர்கே நகர் அடியில் வெளியே தள்ளிய நாக்கில் எச்சில் ஊற பேசிய போது அரங்கத்தில் இருந்த அம்பிகள் அப்படியே "மேளாவில் ஆர்ப்பரிக்கும் அகோரிகளைப்" போல குதித்து விட்டார்கள். 

ஆனால்,   போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த பணத்தை திருப்பிக் கேட்டு நடுரோட்டில் குடும்பத்தோடு போராடியபோது முதல்வர் நாற்காலியில் எந்த ஆசனத்தில் உட்காருவது என்ற மௌன தியானத்தில் இருந்த இவர்களின் நம்பிக்கை உச்ச (உச்சா) நட்சத்திரம் முழித்துப் பார்த்தபோது போராட்டம் வாபஸ் பெற்று இயல்பு நிலை திரும்பிவிட்டபடியால் "பொங்கல் பண்டிகை" முன்னிட்டு, டமிலர்கள் நல்லா வா'ல'ணும்னு   பிரார்த்திக்க  திரும்பவும் போயிட்டார்.

தேசியம், திராவிடம், தமிழ்த்தேசியம், பெரியாரிடம், அம்பேத்காரிசம், பெண்ணியம், காவிரி, ஈழம் என்று எதைக் கேட்டாலும் கிலோ என்ன விலைன்னு கேக்குற ஈர மண்ணு இவரை நம்பி நோட்டா வோடு  கடும் போட்டியில் இருக்குற பாஜக கூட்டணி வைத்து அந்த நோட்டாவை தோற்கடிக்க வியூகம் அமைத்து விட்டது தெரிகிறது. 

ஆனால் தமிழ் ஆர்வலர்கள் எப்படியும் நோட்டாவை இவர்களிடம் தோற்க விடமாட்டாங்க. விடக்கூடாது.

இதை படித்துப் பார்த்துவிட்டு பொங்குகிற அம்பிகள் அல்லது அவர்களின் கூட்டாளிகளுக்கு என்னுடைய கேள்வி இதுதான்.

"தேசபக்தி நிறைந்த பாஜக பல ஆண்டுகளாக ஆளும் எந்த மாநிலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறைந்த பட்சம் அருகிலாவது இருக்கிறது?"














நேற்றைய துக்ளக் ஆண்டு விழாவின் போது பேசிய 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...