மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

மோடி உத்தரவு...சாரி நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கீழமை நீதிபதி திரு.மைக்கேல் குன்ஹா அவர்களின் தீர்ப்புக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்னும் மூன்றே மாதங்களில் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டுமென்று கடுமையாக (!!) எச்சரித்ததால், கனக்குப் புலி குமாரசாமியை வைத்து மீண்டும் ஜெயாவை முதல்வராக்கினது நேற்றைய வரலாறு.

ஊடக பிம்பத்தினாலும் தொடர்ச்சியான பிரச்சாரத்தினாலும் கட்டியமைக்கப் பட்ட 2ஜி வழக்கிலிருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆ.ராசாவையும் கனிமொழியையும் விடுதலை செய்தபின் இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம் களத்தில்  இறங்கி,  இன்னும் 6 மாதத்தில் அனைத்து 2ஜி வழக்குகளையும் முடிக்க வேண்டும் என்று கவலை (!??) தெரிவித்து விட்டார்கள். இது இன்றைய செய்தி. இணைப்பு. 

நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் அப்படியே கீழே.

"சி.பி.ஐ.,யும், அமலாக்க துறையும் இந்த விஷயத்தில் நாட்டு மக்களை நீண்ட நாட்களுக்கு இருட்டில் வைத்து இருக்க முடியாது. இந்த விவகாரம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வழக்குகளில் ஏன் இன்னும் விசாரணை முடியவில்லை என்பதை மக்கள் அறிய வேண்டும். இந்த வழக்கு விசாரணையின் போக்கு குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்; மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். எனவே, 2 ஜி தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். விசாரணையில் ஒரு விஷயத்தை கூட விட்டு விட கூடாது." 

இதில் கவனிக்கப் பட வேண்டிய கருத்து "விசாரணையில் ஒரு விஷயத்தை கூட விட்டு விட கூடாது."    ஆக, இனி ஒரு குமாரசாமி வருவார். தீர்ப்பு எழுதுவார் ஆ.ராசா மற்றும் கனிமொழி குற்றவாளியென்று. இது நாளை நடக்கப் போகும் வரலாற்றுச் செய்தி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...