மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில்

நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை..!!

இன்னும் முக்கல..
தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த ஆன்மீக வியாதி ரஜினிதொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.

அங்கு நிருபர்களை சந்தித்த ஆன்மீக வியாதி ரஜினி கூறுகையில், நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை எனக்கூறினார். செய்தி இணைப்பு

இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லையென்றால், போன வாரம் எம்ஜிஆர் ஆட்சி என்னால் தர முடியும்னு உதார் விட்டது எந்த வகை? 

கல்லூரி வாசலில் அஸ்வினி என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறித்து கருத்துக் கேட்ட போதும் ஓடினீரே..அரசியல்வாதியாக அல்ல ஒரு சராசரி மனிதனாக கருத்துச்  சொல்ல மனித நேயம் போதுமே? அது கூடவா இல்லாத ஆன்மிகம் இருக்கிறது முதல்வர் கனவில் மிதக்கும் உமக்கு?

குரங்கணி காட்டுத்தீயில் கருகி விட்ட  "டமிலர்" களுக்கு இரங்கல் ட்வீட்  கூட தெரிவிக்க முடியாத  அரசியல் பயணத்தில் இமாச்சலப்பிரதேசத்தின் பாஜக முன்னாள் முதல்வர் பிரேம் குமாருடன் நித்தியானந்தா வகை ஆன்மிகம் பேசினீரோ? 
முழு அரசியல்வாதியாகும் ஆன்மீகத் தியானத்தின் போது 
அது சரி, அரசியல் ரீதியானதது, இல்லாதது என்ற கேள்விகள் பிரிக்க முடியுமா என்ன? மக்களை பற்றியும் மக்கள் பிரச்சினை பற்றியும் பேசுவதும் செயல்படுவதும் தானே அரசியல்? அது கூட இல்லாமல் என்ன வெளக்கெண்ணைக்கு தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்?

தலைமை பண்பு, சேவை மனப்பான்மை   என்பது வாழ்க்கையோடு ரத்தத்தோடு  சிறுவயது முதல் நாடி நரம்பில்  கலந்தது..திடீரென்று உருவாகுவதல்ல  ரஜினி..!! அரிதாரங்கள்  எல்லாம் சீக்கிரத்தில் களைந்து போகும் என்பது உச்ச நடிகரான  உமக்கு நன்றாகவே தெரியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...