மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா?

இருக்கு ..ஆனால் காலம்சென்ற நடிகை சௌந்தர்யா சம்பந்தமாக பொது  வெளியில் உம்மிடம் கேட்பது அவ்வளவு நியாயமாகவா இருக்கும்?
அதனால் உமது பேட்டியிலிருந்தே சில கேள்விகள் .. 

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தபின்புதான் கலவரம் உருவாகியதென்று நேரில் பார்த்தவரைப்போல் அறுதியிட்டு கூறுகிறீர் ..
சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததால் காவலர்களுக்கு கோபம் வந்து பொது மக்களை சுட்டுவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்? 

சமூக விரோதிகள், காவலர்களை அடிப்பதற்கு பதில் நேரடியாகவே மக்களை அடித்திருக்கலாம் தானே..கலைஞர் கைது சம்பவத்திற்கு பின்பு நடந்த பேரணியில் ஜெயலலிதா அப்படித்தானே அயோத்திக்குப்பம் வீரமணியை வைத்து ஏற்பாடு செய்திருந்தார்?

சமூக விரோதிகள் காவலர்களை அடித்தால் அவர்களைத்தானே சுடவேண்டும்? செத்தது சமூக விரோதிகளா? 

ஆம் என்றால் சமூக விரோதிகள் செத்ததற்கு நீர் ஏன் 'சுட்டது காட்டுமிராண்டித்தனம்'  என்று போனவாரம் பினாத்தினீர்? 

ஐயா.. உச்ச நடிகரே சில வார்த்தைகள்  உங்களுக்கு ...எங்கள் ஐயன் வள்ளுவன் வாயிலாக..

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 
எச்சத்தாற் காணப் படும் 
நடுவுநிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும் 

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும் 
இனம்போலவே இருந்து உண்மையில் இனமல்லாதவரின் நட்பு பொது மகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும் 

இணையதளம் பக்கம் சற்று எட்டிப்பாரும் எம் தமிழக மக்கள் உமது பேச்சுக்கான  எதிர்வினையை 
"செய்து" இருக்கிறார்கள். அறிந்து கொள்வீர் நீர் எமக்கு யாரென்று...

நாங்கெல்லாம்...!

உச்சத்தில் எரிபொருள்  விலை 
இருளில் இந்தியா..! 
சமாதியில் சிறுதொழில்
தீவிர சிகிச்சைப் பிரிவில்
நீதித்துறை !
இத்தனைக்கும் காரணம்....?
வேறே யார்?
காங்கிரஸ்  தான்!!
- ரஷ்ய அதிபரிடம் இந்திய அதிபராக பரிணாமமடைந்தவர் கவலை. 
-------------------------------------------------------------------------------- 
விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் காங்கிரஸ்தான். ஆம் 100 கோடிக்கும் கூட எம் எல் ஏ க்களை வாங்கமுடியாததற்கு காரணம் காங்கிரஸ்தானே ! 
- அமித்ஷா ஆக்ரோஷம். 
---------------------------------------------------------------------------------
அவாளா இருக்கணும் 
இல்ல.. அவா ஆளா இருக்கணும்..! 
-குடிமைப்பணிக்கு புதிய தேர்வுமுறை அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு தகவல். 

---------------------------------------------------------------------------------
கர்நாடகத்தில் ஜனநாயத்தை நிலைநாட்டியது உச்சநீதிமன்றம்; செய்தி 
- ஆசையை தூண்டுனாத்தானே ஏமாற்றமுடியும்...முழுக்குடுமியையும் காட்டினா முக்கியமான நேரத்துல நாட்டாமை பண்ணுவதெப்படி?

---------------------------------------------------------------------------------
காரணமில்லாமல் மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை செய்யமாட்டார்கள்; ரஜினி  
-  எதற்குமே வாயைத்திறக்காத  நீர் இதற்குமட்டும் கருத்துச்  சொல்லக்  காரணம்? 

---------------------------------------------------------------------------------

இன்றைய செய்தியும் சில நினைவூட்டலும்...!!

பாஜக வினர், வெட்டவெளிச்சமாக மீடியா முன்பே தான் சொன்னதை சொல்லவே இல்லை என்று மிக எளிமையாக சூடு சொரணை மானம் வெட்கம் (அதெல்லாம் பாஜகவில் எதிர்பார்க்கக்கூடாது) எதுவுமில்லாமல் கடந்து செல்வார்கள்.

இருந்தாலும் சில நினைவூட்டல்கள்..

செய்தி 1: எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் இன்றிரவு  அல்லது நாளை அழைக்கிறார் 

நினைவூட்டல் 1:
அருண் ஜெட்லீ : தொங்கு சட்டசபை அமையுமானால்,  தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டணி அமைக்கும்போது, அவர்களை ஆட்சி அமைப்பதற்கும் குறிப்பிட்ட காலத்தில்  பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும்  உத்தரவிடுவதே அரசியலமைப்பு சட்டத்தின் படி சரியாகும். (அப்போ அது மணிப்பூர்லயும் மேகலாயாவிலும் நாகாலாந்திலும் இந்தக் கருத்து தேவையாயிருந்தது)

செய்தி 2: உத்திரப்பிரதேசத்தில் வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து 15 பேர் மரணம், மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

நினைவூட்டல் 2: மேற்கு வங்காளத்தில் 31, மார்ச் 2016ல் தேர்தல் சமயத்தில் பாலம் இடிந்து விழுந்து 50க்கும் மேற்பட்டோர் மரணித்ததை பிரதமரும் வாரணாசி தொகுதி எம்.பியுமான மோடி சொன்னது:  "இது கடவுளின் செய்தி. இந்த ஆட்சி தொடருமானால் ஒட்டுமொத்த மேற்கு வங்காளமும் அழிந்துவிடும்"

ஏதாவது உரைக்கும்ங்கிறீங்க?

நெசம்மாவே நடந்திருச்சா எடியூரப்பா

நாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு (?) வாழ்த்துனதுல இப்போ நிலவரம் அப்படியே ஆயிடுச்சி போல குருநாதா?

பின்வாசல் வழியாவே இதுவரை வாழ்ந்த நம் கட்சிக்கு பின்னாலே குத்திட்டாங்களே குருநாதா...

அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே ...(பின்னணி இசை)


 ..மாட்டுக்குள்ளதையும் மனுஷனுக்குள்ளதையும்  சேர்த்து  வச்சி பூசிட்டாங்களே..!
மேகலாயாவுலயும் கோவாவுலயும் செஞ்சத பார்த்து இப்படி செஞ்சுப்புட்டாங்களே ...
பதவியேற்குமிடத்துக்கு குடுத்த அட்வான்ஸ எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு திருப்பி கேப்பேன்?

அந்த குமாரு பயபுள்ள நல்லா இருப்பானா..
நான் கொடுப்பேனடா எத்தனை கோடின்னாலும் ..நம்ம ரெட்டி காரு கொடுப்பாரேடா கொமாரு நீ நல்லா இருப்பியா?

காவிரி தண்ணிய தராம இருக்க வரைவு திட்டம் செஞ்சோமடா  பாவி இப்போ என் எங்க கண்ணுல தண்ணிய வர வச்சி பிளான் பி திட்டத்தை செஞ்சுப்புட்டாங்களே கொமாரு ...

ஆமா ஓட்டு மெஷின்ல அந்தக் குத்து குத்தியுமா நாங்க தோத்துட்டோம்? கள்ளத்தனம் செய்யாம இருந்திருந்தா இந்நேரம் நாறியில்ல போயிருக்கும்..

காவிரி எழவு திட்டம்

ஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில் உலாவினது நியாபகத்திற்கு வருகிறது. பின் நாட்களில் அது  நகைச்சுவை காட்சி அமைப்பாக பூவே உனக்காக திரைப்படத்திலும் இடம்பெற்றது.

பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லையென்று கிழவி சொன்னவுடன் நம்பியார் மீண்டும் அவனைக் கூப்பிட்டு இங்கே நான் தான் எல்லாம் அவள் என்ன சொல்லுவது.. நான் சொல்லுகிறேன், உனக்கு பிச்சை கிடையாது என்று கூறுவார்.

அதே போல் கர்நாடகம் என்ன தண்ணீரை மறுப்பது? நாங்கள் சொல்கிறோம் தண்ணீர் தர முடியாது என்று  தமிழகத்தின் உரிமையான  காவிரியை பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளிவிட்டதுமல்லாமல் இவர்கள் அமைக்கும் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான மேலாண்மை அமைப்போ அல்லது வாரியமோ அதன் வரைவு திட்டத்தில் மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும், காவிரி அமைப்பு மேற்பார்வை பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் என்று  மத்திய அரசின் சார்பாக நீர்வளத்துறை செயலர் என்று யு.பி.சிங் கூறியுள்ளார். 

இது தமிழகத்திற்கு செய்யப்பட மிகப்பெரிய மோசடி. 

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்  கர்நாடகம் தண்ணீர் தரவில்லை என்று தானே மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது? இன்னும்  அவர்கள் அதிகாரத்தில் அணைகள் இருக்குமானால் மறுபடியும் முதலில் இருந்தா?

அது சரி.. தேர்தலும் நடத்தியாகிவிட்டது, ஆட்சியையும் பிடித்தாகிவிட்டது, இப்போது கர்நாடக ஆட்சி தானே முக்கியம்...

தமிழகத்தின் முதுகில் குத்திய மத்திய அரசு இப்போது ஒரேயடியாக நெஞ்சிலே குத்திவிட்டது. அடக்கம் மட்டும் தான் செய்ய வேண்டியுள்ளது.

அதற்குத்தான் காவிரி எழவு திட்டம்.

வளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ

பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று அவாள் கூட்டம் கொக்கரிக்கும் நாள் விடியாமலேயே போவதாக. 

கர்நாடக மாநில தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கள்ளத்தனம் செய்யாமல் ஒட்டுமொத்த மாநிலத்தில் எப்படிடா சாத்தியம்?

தேர்தல் ஆணையத்தால் தயாரித்து கொடுக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள்  அச்சு அசலாக ஆயிரக்கணக்கில் பாஜக பிரமுகரின் வீட்டில் கைப்பற்றியபோதே தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து தேர்தல் நடத்தும் பொறுப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும். 

ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் புதிய நோட்டுக்கள் மிகச்சாதாரணமாக கட்டுக்கட்டாய் பிடிபட்ட போது அது எந்த வங்கிக்கானது என்று தெரியாது என ரிசர்வ் வங்கி கள்ள மவுனம் சாதித்ததைப்போலவே இன்று கள்ளத்தனமாக தேர்தலையும் நடத்திவிட்டு பதவியேற்புக்காக ஆயத்த வேலைகளில் இருக்கிறார்கள்.

அவாள் தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எக்சிட் போல் சொன்னபோதே தெரியும் தேர்தலின் முடிவு பாஜகவுக்கு சாதகம் என்று.

முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்துக்கள் !!


நிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்

வாழ்த்துக்கள்...மனமார வாழ்த்துக்கள் ...!!!

நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய அத்துணை பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வலைத்தள பதிவர்கள் என்று அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி..

நீங்கள் வென்று காட்டினீர்கள் 
நாங்களும் மகிழ்கிறோம் 
ஆனந்தக்  கண்ணீரோடு மட்டுமல்ல  
அந்நிய தேசத்தில் இருந்தாலும் 
என் சொந்த தேசம் 
ஒன்றுபட்டு ஓங்கி நிற்கிறது 
தமிழன்டா என்ற கெத்தோடு கூட 


ஏலே ..வரலாறு பேசும் லே..!!! 

திருடன் திருடவும்


திருடன் திருடவும்...

சூது கவ்விய தேசத்தின்
மாலை கவ்வும் நேரம் 
தன்னையும் மண்ணையும் சார்ந்த 
தன்மானக் குடியானதொருவன், 
சந்தையில் வாங்கிய ஆட்டை  
தன் தோளில் தூக்கி
சந்தோசமாய் சென்றான்
தன்  மந்தை நோக்கி ..

மறியைப் பறித்திட 
தீட்டினர் திட்டமொன்றை, 
யோக்கியனென்ற பெயரெடுத்த 
நாலு கடைந்தெடுத்த அயோக்கியர்கள். 

ஒருவன், 
பேரே யோக்கியன் 
தமிழ் தேசியமென 
தம்பட்டம் அடிக்கும் தகர சாமான். 

மற்றவன், 
மகா யோக்கியன் 
மய்யத்தில் நானென்பான் 
எவன் எக்கேடு கெட்டிடினும் 
எப்பக்கமுமில்லை,  நான் மையமென்பான். 

மூன்றாமவன், 
தீவிர யோக்கியன் 
ஆன்மீகப் புயலெனும் 
அமுங்கனிக் கள்ளன்.

அடுத்தவன், 
அதி தீவிர யோக்கியன். 
வளர்ச்சியென்பான் மலருமென்பான் 
வயசுக்கு வராத மொட்டைக்கூட 
கசக்கியெறியும் கள்ளவழி பிறந்த 
தேசபக்த காமுகன். 

நால்வரும் கண்டனர் மறியை 
கால்பங்கு ஆளாளுக்கு, காலோடு சேர்த்து
தனித்தனி செல்வதென முடிவு 
எத்தனித்தனர் எச்சில் ஊற

நாயை சுமப்பதேன் தம்பி.. 
வழிமறித்துக் கேட்டான்
முதலாம் யோக்கியன்,
முன்னோரின் ஓலையின்படி 
முப்பாட்டன் வழி  சொந்தம் 
நான் உன்னுடைய 
அண்ணனென்ற  அறிமுகத்தோடு!.
ஆட்டு மறியை   நாயென விளிக்கும் 
அதிசயப்  பயித்தியமா  நீ 
வழியை விடு என்றவாறே 
வழியைத்  தொடர்ந்தான் - ஆனால் 
அணுவளவு கீறல் அவனுள்ளத்தில் 

சற்று தூரம் கழிய 
மற்ற யோக்கியன் வந்தான், 
மய்யம் என்றவாறே !
பன்றியின் நிறம் கருப்பு - ஆனால் 
கறுப்பெல்லாம் கறுப்பல்லவென்று 
கரகரத்தான் கருஞ்சட்டையோடு ! 
கடுப்படிக்காதே விசயத்தைச்சொல் 
என வீரம் செறிக்க கேட்டவனிடம் 
அறமன்று பன்றியை சுமப்பது 
என்றவாறே ட்வீட்டவும் செய்தான் !!

சிறுகீறல் இப்போது 
சிக்கலாய் விரிந்தது !! 
விறுவிறுவென விற்றவுடன் 
கிளம்பிய வியாபாரியின்  பிம்பம் 
கண்திரையில் சிரித்தது !!
சந்தேகப்பட்டது சரிதானோ 
இல்லை இல்லை இது ஆடுதான் என்றான்
அடிமனதில் ஆட்டத்தை அடக்கிக்கொண்டு.

மூன்றாமவன் வந்தான் 
முப்பது முழ தூரம் கழித்து. 
வாயே தொறக்காதவன், 
வாயைப் பிளந்தான் ஆன்மீக வாடையோடு 
தோளை பார்த்து கத்தினான் 
இமயமலை மீது சத்தியம் 
நிச்சயம் நீ சுமப்பது பாம்பென்று !!

அடிமனதின் ஆட்டம் இப்போ உதறலாய் !!
என்னாச்சு உங்களுக்கென்று 
சில நாழிகை முன் கேட்டவன் 
என்ன நடந்தது எனக்கென்று 
தன்னைக் கேட்டான் சிந்தனையில் !!

கடைசியில் நின்றான் அதிதீவிர யோக்கியன். 
கல்லெறிக்குத் தப்பிய கள்வன் போல,
கத்தினான் கையால் பொத்தியபடி 
காவிப் பற்கள் தெரியாதபடி !!
இந்துவல்லவோ நீ 
அவன் பிணத்தை சுமப்பானேன் 
அசுத்தத்தை சுமக்காதேடா அம்பி !!

உதறல் உள்ளத்துக்குள் ஊக்கமாய் கொதித்தது
உளறல் எனலாம் ஒருவனென்றால்... 
அத்தனை பேரும் பொய்யாகுமோ?
மறியல்ல இது வேறெதுவோ..!! 
இறக்கிவிட்டு  ஓடினான்
தான் வந்த வழி தெறித்தபடி 
தன் நிலை நொந்தபடி 

நால்வரும் கூடினர் 
நாற் பங்காகியது மறி  
அறிந்து கொள் தமிழா 
விழித்துக் கொள் !!

ஆட்டைத் தொலைத்த 
அப்பாவியோடு போகட்டும்,
நாட்டைத் தொலைத்துவிடாதே !

அக்கறையன்று அவர் குரல் !!!
அடித்துச் சொல்கிறேன், 
திருடன் திருடவும் 
கொல்லவும்  அழிக்கவுமேயன்றி 
வேறொன்றுக்கும் வரான்...!!!

அப்பா எங்கே?

அப்பா எங்கே?
நிற்க இடமில்லாமல் 
நீண்ட  ரயில் பயணம் 
கால்கடுக்க நின்று
கால் இடுக்கில் கிடைத்த 
காலடி இடத்தையும் கொடுத்து 
கண்விழித்து 
கலங்காத ராசா என்று 
தட்டிக்கொடுத்து 
நன்றாய் எழுது 
நாளைய தேர்வில் வெல்லு 
நமக்காகும்  நாளை என்றவர்  
என்னையும் கனவையும் 
தன் நெஞ்சில் தாங்கி 
இங்கு தான் எங்கோ நிற்கிறார் 
எழுதிவிட்டேன் நன்றாய் 
என்று சொல்லி மகிழ 
என் அப்பா எங்கே?



தமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிடத்தயார் - தமிழிசை


தமிழகத்திற்கு பாஜக செய்ததை பட்டியலிட தயார்.
தமிழிசை சவால் 

இன்றைய (03.05.2018) செய்தி..! 

பட்டியலில் சில.. 



பிரதமர் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வரைவு அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை 


தமிழகத்தில் நீட் மையம் அமைக்க இயலாது. மாணவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டும்


இதுவும் இன்றைய செய்தி தான்..!!!  



படம் சொல்லும் செய்தி


ப.சிதம்பரம்: அது எப்படி அப்பு..மோடி எவ்வளவு ஆப்படிச்சாலும் வலிக்காதது மாதிரி கெத்தா இருக்கீரு.

அத்வானி: ஹா..நீங்க பத்து வருசமா மூத்திர சந்துல கும்முனதுல  இப்பெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற தெம்பு வந்திருச்சி 


மோடி: எழுதி வைக்காம ராகுல் ஒரு பதினைந்து நிமிஷம்  பேச முடியுமா?

மக்கள்: அண்டப்புளுகு புளுகாம உம்மால ஒரு நிமிஷம் பேச முடியுமா?


மத்திய அரசு: பி.எச்டி முடித்தவர்களுக்கே இனி உதவி பேராசிரியர் வேலை.

பக்தாள்: நிர்மலா தேவி  தேசபக்தியோடு  நாட்டுக்கான சேவைதான் செஞ்சாங்க ன்னு இப்பவாச்சும் தெரியுதா?


வைரல் வீடியோ: ரயில் கழிப்பறையில்  தண்ணீர் நிரப்பிக்கொண்டு தில்லாக சென்ற டீ வியாபாரிகள்.

மக்கள்: டீ விற்றவர்கள் நாட்டிலும்  இப்போ டீ விற்றுக்கொண்டிருப்பவர்கள் பயணிகளிடமும் மோ(ச)டி செய்கிறார்கள். 


திரிபுரா முதல்வர்: எனது அரசில் தலையிட்டால் நகத்தை வெட்டுவேன் 

குருமூர்த்தி: திரிபுரா நிலவரம் தெரிஞ்ச அவரு திரிபுரா மக்களுக்கு சேவை செய்யிறாரு..அமெரிக்காவுக்கல்ல  






ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...